சத்திரசிகிச்சைகளை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது!

0

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளை நடத்துவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சையின் போது குழந்தையை தவிர மேலும் ஒருவருக்கு மாத்திரமே சத்திரசிகிச்சைக்கு வருகைதர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடியுமானால் குழந்தையின் தாயை மாத்திரம் சத்திரசிகிச்சை கூடத்திற்குள் அனுமதிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக இடைவெளியை கடைபிடித்து சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.