சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம் – அரசாங்கம்

0

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் பரிசோதனைகள் பெறப்பட்டுள்ளன என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பதார்த்தம் உள்ளடங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்துமாறும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.