சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா – சபாநாயகரும் தனிமைப்படுத்தப்படலாம்

0

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

சபாநாயகரின் ஊழியர்களில் பலர் இந்த தொற்றாளரின் முதல் வரிசை இணைப்பாளர்கள் என்பதன் காரணமாக அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் வரிசை இணைப்பாளர்களாக சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளரின் முதல் வரிசை இணைப்பாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டால், சபாநாயகரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இன்று நடத்தப்படும் PCR பரிசோதனையின் பின்னரே அது தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.