இலங்கையில் சமூகத்திற்குள் கொரோனா தொற்று பரவ கூடிய ஆபத்து அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைய கூடும் என்பதனால் அவர்கள் ஊடாக சமூகத்திற்குள் கொரோனா பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக மட்டத்தில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் எந்தவொரு நோயாளியும் இதுரையில் அடையாளம் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தவர்களாகும்.