சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம் – அனில் ஜாசிங்க

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் வதந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் தொடர்புகொண்டு சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.