சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என அறிவிப்பு!

0

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.