சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிப்பு?

0

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்தமையால், எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.