சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று

0

சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 500 ரூபா அளவில் அதிகரிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த எரிவாயு கொள்கலன் 4 ஆயிரத்து 409 ரூபாவாக தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி 5ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்போது 12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.