சரியான தகவல்களை வழங்காவிடின் ஆபத்து என எச்சரிக்கை!

0

தகவல்களை மறைக்காமல் கொரோனாவினை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல்களை மறைக்கும் செயற்பாடானது, வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும் சிக்கலை ஏற்படுத்தும் என, அவர் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் தென்படுமாயின், வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 1999 அல்லது 1390 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வைத்திய ஆலோசனையின்றி வைத்தியசாலைகளுக்கு வருகைதருவோரால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சரியான முகவரியை வழங்குமாறு அவர் கோரியுள்ளதுடன், ஒரு சிலர் முகவரியை மாற்றிக் கூறியதாலும் பிரச்சினை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.