சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம்!

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த கூட்டம் இடம்பெவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றால் பிற்போடப்பட்டுள்ள பொதுத் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், சுகதார அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினருடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்தலினை நடாத்தும் தினம் குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.