‘சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம்’ – பீரிஸ் திட்டவட்டம்

0

உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

உள்ளக பிரச்சினைகளை தீர்க்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், தேசிய நிறுவனங்களின்கீழ் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அதேபோல ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இலங்கை தொடர்ந்தும் நல்லுறவை பேணும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.