2020ஆம் ஆண்டுக்கான ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’ இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப வளவில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது தடவையாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தொற்று நிலைமை காரணமாக இம்முறை சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளுக்கமைவாக கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.