சஹ்ரானின் கருவறையை அழிக்க வேண்டும் – விமல் ஆவேசம் – புலிகளுக்கு புகழ்பாடினார்

0

பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதங்கள், கழுத்தறுப்பதற்கு கற்பிக்கவில்லை. பாகிஸ்தான் மதரஸாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரபி மற்றும் மதரஸாக்கள், பிரிவினைவாதிகளை உருவாக்கியமையாக, சாட்சிகள் அளிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, சஹ்ரான் பயங்கரவாதியை உருவாக்கிய, கருவறையை அழிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியைக் கோரி, சுமந்திரன் எம்.பி, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். கொழும்பு, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்துச் சென்றவர்களின் வாதத்தால், மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.

“முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து ஒரு நாயேனும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருக்காது எனத் தெரிவித்த விமல் வீரவங்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் ஏற்பட்டிருந்த தேசிய பாதுகாப்புக்கான வெற்றிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கு அனுமதிக்கமுடியாது. பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சித்த சஹ்ரான் பயங்கரவாதியை உருவாக்கிய கருவறையை அழிக்கவேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்த அவர், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினருக்கும் ஹிந்து கோவில்களுக்கும் தொடர்பில்லை என்றார்.

சஹ்ரானின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின் பிரகாரம், சஹ்ரான் பயங்கரவாதி உருவாக்கப்பட்டுள்ளார்.

அந்தக் கருவறைகளை அழிக்கவேண்டும். உருவாக்கியவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான், கோவில்கள், தேவலாயங்கள் மற்றும் விஹாரைகளுக்கு அச்சமின்றி போகமுடியும் என்றார்.