சஹ்ரான் அல்ல நவ்பர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி!

0

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய அவர் இதனை கூறியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் 19 ஆண்டுகளாக இருக்கும், சர்வதேச தொடர்புகளை பேணி வந்த நவ்பர் மௌலவி என்பவரே தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுவந்துள்ளார்.

குண்டு தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே தப்போதைய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்தேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.