உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீம், படகு ஊடாக இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று முந்தினம் (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரிப்கான் பதியூதீன், ஆட்கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட பல வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
குறித்த புலனாய்வு அதிகாரியிடம் நேற்று அதிகாலை 1 மணிவரை, ஆணைக்குழுவில் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.