அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.