சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

0

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே கொடுப்பனவை பெற தகுதியுள்ள நபர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.