சாரதி அனுமதிப் பத்திரத்தில் கொண்டுவரப்படும் புதிய நடைமுறைகள்

0

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான புள்ளி வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இப்புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கமைய சாரதி ஒருவர் இழைக்கும் போக்குவரத்து குற்றங்களுக்காக சாரதி அனுமதிப் பத்திரத்திலுள்ள புள்ளிகள் குறைக்கப்படும்.

புள்ளிகள் குறைவடைந்து பூச்சியத்திற்கு சென்றால் அந் நபரின் சாரதி அனுமதிப் பத்திரம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதி அனுமதிப் பத்திரம் நிராகரிக்கப்பட்ட ஒருவர் புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது என கூறப்படுகிறது.