சாரதி அனுமதி பத்திரம் இதுவரை எடுக்காதவரா நீங்கள் – இது உங்களுக்கான தகவல்!

0

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கல், பரீட்சை, வாகனம் செலுத்தும் செயல்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் அச்சநிலை காரணமாக முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.