கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிற்கான பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி நேற்றுமுன்தினம் காலை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொற்று உறுதியான இருவரிடத்திலும் நெருங்கி பழகியவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் பிரகாரம் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் பகுதியின் முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் அமைந்துள்ள அல்அக்சா பாடசாலையின் கல்விசெயற்பாடுகள் எதிர்வரும் 16ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.