சிகிச்சையின்றி HIV தொற்றிலிருந்து மீண்ட பெண்மணி!

0

‘HIV‘  தொற்றினால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல்  தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில்  66 வயதான லோரீன் வில்லென்பெர்க் (Loreen Willenberg)  என்பவருக்கு கடந்த  1992  ஆம் ஆண்டு HIV தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனினும் கடந்த 28 ஆண்டுகளில் லோரீன் வில்லென்பெர்க்கின் உடலானது HIV வைரஸை வெல்லும் அளவுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை உருவாகியிருந்தது.

இந் நிலையில் அவர் தற்போது எந்தவொரு சிகிச்சையும் மேற்கொள்ளாமல் HIV தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் HIV  தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கப் போராடி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு   லோரீன் வில்லென்பெர்க் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.