சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த இறுதி தீர்மானம் விரைவில்

0

சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த இறுதித் தீர்மானம் விரைவில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பண்டிகைக்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகின்றது.

இந்தநிலையில் சுகாதார தரப்பினரின் பரிந்துரைகளுக்கு அமையவே இதுகுறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.