சினிமா பாணியில் தப்பிச்செல்ல முயற்சித்த 8 பெண் கைதிகள்

0

சினிமா பாணியில் தப்பிச் செல்ல முயற்சித்த 8 பெண் கைதிகள் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர்கள் இரண்டு பேரை தாக்கி அவர்களை கட்டிப் போட்டு இந்தப் பெண் கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த எட்டு பெண் கைதிகளும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர்களாவர்.

தாக்குதலுக்கு இலக்கான சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.