சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

0

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

வட மத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திரவினால் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமக்கெதிராக சுமத்தப்பட்டிருந்த 5 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.