சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்

0

கொரோனா தொற்றினால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்கு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் சிற்றுண்டிகளை உட்கொள்வது அதிகம் என்பதால் எடை அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.