சிறுவர்கள் மனநோய்க்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக கவலை!

0

சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக வீடுகளில் சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.