ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வீதியில் சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஜனாதிபதி,
“ஒவ்வொரு முறையும் இந்த நாட்டு பெற்றோர்கள், மற்றும் இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.