சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை!

0

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல். அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரைடி 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாணம் மற்றும் மேலும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட வயல்களில் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.