சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது!

0

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி நிலவரப்படி 30 ஆயிரத்து 54 கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சிறைகளில் 11 ஆயிரம் கைதிகள் மட்டுமே இருக்க முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

28 ஆயிரத்து 469 ஆண் கைதிகளும் ஆயிரத்து 585 பெண் கைதிகளும் தற்போது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்த ஆயிரத்து 404 கைதிகளும் தண்டனை பெற்ற 7 ஆயிரத்து 211 கைதிகளும் சிறைகளில் உள்ளனர். அத்துடன், 21 ஆயித்து 439 பேர் விளக்கமறியலில் உள்ளனர்.

தண்டனை பெற்ற தங்கள் தாய்மார்களுடன் 43 குழந்தைகள் சிறைகளில் உள்ளனர். 195 வெளிநாட்டவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போகம்பர சிறைச்சாலையை மீளவும் கையகப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் போகம்பர சிறைச்சாலை கையகப்படுத்தப்படும் என சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.