பாதாள உலக கும்பல்களின் செயற்பாடுகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை சிறைச் சுவர்களுக்குள் இருந்து இயங்குகின்றன என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அந்த தவறான செயல்களை கண்டறிவதற்கும் அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு பாதுகாப்பான நாட்டையும், ஒழுக்கமான, சிறந்த மற்றும் சட்டபூர்வமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது என்றார்.
மேலும் இந்த செயலணி அரச அதிகாரிகளை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது என்ற சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மறுத்துள்ளார்.
இதேவேளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் பதிவாகியுள்ள அனைத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளும் இலங்கை கடற்படை மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள்.
குறிப்பாக உள்ளூரில் கொரோனா தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்படுவதற்கு 40 நாட்களுக்கு முன்னரே குறித்த செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.