சிறைக் கைதிகளை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தம்

0

சிறைக்கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள், காணொளி தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

விளக்கமறியல் கைதிகளுக்கான அடுத்த வழக்கு திகதியை தீர்மானித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இவ்வாறு முன்னெடுக்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை கைதிகளை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றும் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.