சிறைச்சாலைகளில் எதிர்காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறகூடாது

0

சிறைச்சாலைகளில் எதிர்காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறகூடாது எனவும் அவ்வாறான சட்டவிரோத செயல்களை இடம்பெறுவதற்கு உதவிய அதிகாரிகளுக்கு எதிராக தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட செயலமர்வில் அவர் இதனை கூறினார்.

இவ்வாறான ஊழல்மிகு அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் கூறினார். 

சிறைச்சாலைகள் சேவையை திறம்பட முன்னெடுக்க அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

´ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடாது, ஓய்வு பெற்ற பின்னரும் தமது சேவையில் திருப்தியடைய கூடியவகையில் சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட வேண்டும்´ எனவும் அவர் மேலும் கூறினார்.