சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து விபத்து – ஆறு பொலிஸார் காயம்!

0

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்கா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தமையினாலேயே நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த ஆறு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.