சிலாபத்தில் கோரவிபத்து – ஐவர் படுகாயம்!

0

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய வெஹரகெலே பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஐவரும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேனில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் பயணிக்க முற்பட்ட போது, பின்பக்கமாக அதிக வேகத்தில் வருகை தந்த டிப்பர் வண்டி எதிரே வந்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் சாரதிகள் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் போக்குவரத்து பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.