சில சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்நாட்டவருக்கு அனுமதி மறுப்பு

0

பொலன்னறுவை மற்றும் சிகிரியா ஆகிய சுற்றுலா தளங்களுக்கு இன்றைய தினம் (04) உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவிக்கின்றது.

இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள யுக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த இரண்டு பகுதிகளுக்கும் செல்லவுள்ள நிலையிலேயே, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவையிலுள்ள 4 சுற்றுலா தளங்களுக்க இன்று பிற்பகல் ஒரு மணி முதல் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்லமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, சிகிரியா சுற்றுலா வலயத்திற்கு நாளை மறுதினம் நண்பகல் 12 மணி முதல் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவிக்கின்றது.