சில பகுதிகளில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி

0

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அபாயம் நிலவும் மாவட்டங்களிலும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வரும் பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை குறித்த மாவட்டங்களில் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

இதனை தவிர, அபாயம் நிலவும் மாவட்டங்களில் மருந்துகளை இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.