சில மதுபானசாலைகளை திறக்க அனுமதி

0

சுற்றுலா சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹோட்டல்களிலுள்ள மதுபானசாலைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு கலால்வரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார நடைமுறைகளின் கீழ், நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சபையினால் அனுமதி வழங்கப்படாத ஹோட்டல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூடப்பட்டுள்ள மதுபானசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அனுமதிப் பெற்ற சுமார் 4500 மதுபானசாலைகள் உள்ளதாகவும், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை நட்டம் ஏற்படுவதாகவும் கலால்வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.