சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்ற நபர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம்(1) சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்ற குறித்த நபருக்கு சிகப்பு அம்பல பகுதியை அண்மிக்கும் போது மாரடைப்பு ஏற்றபட்டதையடுத்து நல்லதண்ணி பொலிஸார் அவசர அம்புலன்ஸ் சேவையில் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த நபர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நாகந்த கெகரகே குணசேகர என்பவரே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் சடலம் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்