சிவில் விவகாரங்களில் எந்த இராணுவத்தினரும் ஈடுபடவில்லை – அரசாங்கம்

0

நாட்டில் தற்போது எந்தவொரு பாதுகாப்பு தரப்பினரும் சிவில் விவகாரங்களில் ஈடுபடவில்லை என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அவசரகாலச் சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கை குறித்த ஐ.நா.ஆணையாளரின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அண்மையில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக கூட அரசாங்கம் படையினரை பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

இவ்வாறு இராணுவமயமாக்கல் நடவடிக்கையையோ பொதுமக்களை அச்சுறுத்தும் முயற்சியையோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காகவே அவசரகால விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.