சீரற்ற காலநிலையால் 20 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம் – ஐவர் காயம்!

0

நாட்டில் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற கால நிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 960 வீடுகள் பகுதியளவும், 18 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 17 ஆயிரத்து 481 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 498 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், 23 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 3 ஆயிரத்து 537 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.