சீரற்ற வானிலை – நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், 279 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 138 பேர், தெரிவுசெய்யப்பட்ட 23 பாதுகாப்பான இடங்களில் தற்கவைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்கள் காரணமாக 8 வீடுகள் முழுமையாகவும், 586 வீடுகள் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 55 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 101 குடும்பங்களை சேர்ந்த 450 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 55 குடும்பங்களை சேர்ந்த 265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.