சீரற்ற வானிலை – 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!

0

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 428 குடும்பங்களை சேர்ந்த  9 ஆயிரத்து 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 33 வீடுகள் முழுமையாகவும், 555 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2 இடர்தங்கல் முகாம்களில், 99 குடும்பங்களை சேர்ந்த 325 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.