சீஸ் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

0

சீஸ் கொள்வனவு செய்யும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த சீஸ் கட்டிகள் இரண்டில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டிற்கு கொண்டு சென்று திறந்து பார்க்கும் போது அந்த சீஸ் கட்டிக்குள் இரண்டு புழுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதனை பரிசோதித்து பார்த்த போது இது காலாவதியான சீஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொள்வனவு செய்தவர் குறிப்பட்டுள்ளார்.

இதனால் சீஸ் கொள்வனவு செய்தவர்கள் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.