சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா?

0

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

சுகாதார அமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவருக்கு நேற்றைய தினம் பி சிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிசி ஆர் பரிசோதனையின் முடிவு  வௌிவரும் வரை சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர பியல் நிஷாந்த ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கும் கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.