சுகாதார ஊழியர்கள் 50பேருக்கு கொரோனா

0

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 50சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனாவின் முதலாவது அலையின்போது காணப்பட்ட நிலையை விட தற்போது வித்தியாசமான நிலைமை தோன்றியுள்ளது.

கொரோனாவின் 2ஆவது அலை ஆரம்பித்த பின்னர், 50சுகாதார ஊழியர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுகாதாரதுறை நெருக்கடியை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கு பொறிமுறையொன்று  மிகவும் அவசியமாகும். இவ்விடயம் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் தடையின்றி இயங்குவதற்கு பொருத்தமான பொறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்துடன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனிமைப்படுத்தல் காரணமாக சில வைத்தியசாலைகளில் முழுப் பிரிவுகளுமே மூடப்பட்டுள்ளனன” என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.