சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இன்று மட்டக்களப்பில் ஒத்திகை வாக்களிப்பு

0

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இன்றும் (13) ஒத்திகை வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

கம்பஹா, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இன்று ஒத்திகை வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

அதேபோல் நீர்கொழும்பு, கற்பிட்டி, கொடபொல, லுனுகம்வெஹர, ரத்தொட மற்றும் திபுலாகல ஆகிய மாவட்டங்களில் இந்த ஒத்திகை வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல்கள் அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு ஒத்திகை வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன. 

மேலும் மாத்தளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தறை, மட்டக்களப்பு, மொணராகலை, பதுளை, களுத்துறை, புத்தளம், மன்னார், கொழும்பு, கம்பஹா, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஒத்திகை வாக்களிப்பு இடம்பெறவுள்ளன. 

கடந்த 7 ஆம் திகதி காலி அம்பலாங்கொட கிராம சேவையாளர் பிரிவில் இவ்வாறான ஒத்திகை வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.