சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா

0

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.