சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்! ஏற்படப்போகும் விபரீதம் குறித்து எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்

0

நாட்டை முடக்கினால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும், அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

எனவே நாட்டு மக்கள் தங்களது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டை முடக்கும் போது பொருளாதார நெருக்கடி மனநிலை பாதிப்பு, குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ்பட்ட மக்களின் வாழ்வாதாரம் என்பன பாதிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதனால் மக்கள் அனாவசிய பயணங்களை தவிர்த்து சுய பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.