சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு சுதந்திரக்கட்சி அதிருப்தி!

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,  முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம்  வழங்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது.

ஆனால் எங்களுடைய பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜனபெரமுன அனுப்பியுள்ளது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக பொதுஜன பெரமுன எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.  இது இரு கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு முரணானது.

எனவே நாம் பொதுஜன பெரமுனவின் இத்தகைய செயற்பாடு குறித்து அதிருப்தி அடைந்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.