சு.க. தனிவழி! – விமல், கம்மன்பிலவையும் இணைத்து கூட்டணி அமைக்கவும் முயற்சி

0

மாகாண சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

மைத்திரிபால சிறிசேன(Maithiripala Sirisena) தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின் கீழ் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டணியில் அமைச்சர்களான விமல் வீரவன்ச(Vimal Weeravansa), உதய கம்மன்பில(Udaya Gampanpilla) தலைமையிலான கட்சியினரையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

கூட்டணி அமைக்கும் நடவடிக்கை வெற்றியளிக்கும் பட்சத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயாசிறி ஜயசேகர போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.